சமந்தா

சமந்தா

சமந்தா

  • அறியப்படுகிறது: Acting
  • பிறந்த நாள்: 1987-04-28
  • பிறந்த இடம்: Chennai, Tamil Nadu, India
  • எனவும் அறியப்படுகிறது: Samantha Naga Chaitanya, Samantha, Samandha, சமந்தா அக்கினேனி, சமந்தா , Samantha Akkineni, Samantha RuthPrabhu, Samantha Ruth Prabu, Samantha RuthPrabu

சுயசரிதை:சமந்தா ருத் பிரபு, ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு தம்பதியருக்கு பிறந்த இவர் வளர்ந்தது சென்னையில். ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் மற்றும் தூக்குடு அடுத்தடுத்து வெற்றி பெற, தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் யசோதா ஆகும். இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம், முதன்முதலாக ஏ. ஆர். ரகுமானுடன் கௌதம் மேனன் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டு இருந்தது. Advertisement அத்திரைப்படத்திற்காக ஆகஸ்ட் 2009-தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார், அத்திரைப்படம் பிப்ரவரி 16, 2010-ல் வெளியானது. இவர் ஜெஸ்ஸி என்னும் ஐதராபாத்தில் வசிக்கும் மலையாள கிருத்துவ பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியான பிறகு, சமந்தாவின் நடிப்பை பாராட்டி நாளிதழ்களில் வரத்துவங்கியது. சிபி உட்பட பல இணையத்தளத்தில் இவரை "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்" என்றும் அவருடைய அழகு, "கவர்ந்திழுப்பதாகவும்", என சிபியில் இவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தது. அதன்பிறகு ஏ. ஆர். ரகுமான் இசையில், கௌதம் மேனன் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலிலும் தோன்றினார்.

சமந்தா திரைப்படங்கள்